கைதிகள் தப்புவதை தடுக்க "வீடியோ கான்பரன்ஸ்" விசாரணை
சென்னை:
கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக தமிழகத்தில் விரைவில் "வீடியோ கான்பரன்ஸ்" என்றநவீனமுறை மூலம் விசாரணைகள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை)சட்டசபையில் கூறினார்.
தமிழகத்தில் சமீபகாலத்தில் விசாரணைக்காக ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு அழைத்துச் செல்லப்படும்போது,போலீசாரிடமிருந்து கைதிகள் தப்பும் சம்பவம் அதிகரித்துள்ளது. மதுரை அருகே சமீபத்தில் 2 அல்-உம்மா கைதிகள்தப்பிச் சென்றது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து சட்டசபையில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து பேசும்போது ஜெயலலிதா கூறியதாவது:
குற்றவியல் சட்டம் 167 (2)(பி) என்ற சட்டப் பிரிவின் அடிப்படையில் "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தைச்செயல்படுத்த முடியும். இந்த நவீன முறை விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மத்தியச் சிறைகள் இந்த "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தின் மூலம்கம்ப்யூட்டர்களால் இணைக்கப்படுகின்றன.
ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியை, வேறு ஊரிலுள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லாமலேயே இந்த "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தின் மூலம் விசாரணை நடத்த முடியும்.
இதனால் விசாரணை நேரமும், ஏராளமான பணமும் சேமிக்கப்படுகிறது.
வரும் ஜூன் மாதம் சென்னையில் முதல் முதலாக இந்த "வீடியோ கான்பரன்ஸ்" விசாரணை தொடங்கி வைக்கப்படஉள்ளது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்ட சிறைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
கைதிகள் தப்பிப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 357 விசாரணைக் கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்களைப் பிடிப்பதற்கு எந்தவிதமான தீவிரமான முயற்சியையும் அந்த அரசுஎடுக்கவில்லை.
ஆனால் கடந்த மே மாதம் அதிமுக அரசு மீண்டும் பதவியேற்றதிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வது வெகுவாகக்குறைந்துள்ளது. அப்படியே தப்பித்தால் கூட விரைவில் அந்தக் கைதிகளைப் பிடிப்பதற்காக தமிழக அரசுபோலீசாரை முழு வேகத்துடன் முடுக்கி விடுகிறது.
தற்போது கூட மதுரையில் தப்பிய இரண்டு அல்-உம்மா கைதிகளில் ஒருவனை அடுத்த இரு நாட்களிலேயேபோலீசார் சிவகங்ககையில் பிடித்து விட்டனர். அவர்கள் தப்புவதற்கு உதவிய சிலரையும் தற்போது போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் தீவிரவாதமும் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் 184 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்ஜெயலலிதா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications