ஒரிஸ்ஸா சட்டசபையை சூறையாடிய வி.எச்.பி.
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா சட்டமன்றத்தை இன்று விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் சூறையாடினர்.
நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அயோத்தியில் வி.எச்.பி. நடத்திய தூண் தான நிகழ்ச்சியை பல கட்சிஉறுப்பினர்களும் கண்டித்துப் பேசினர்.
இந் நிலையில் இன்று சட்டமன்றத்துக்கு அருகே வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் யாகம் நடத்தினர்.இதன் பின்னர் இவர்களில் 500 பேர் மனு கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு சட்டசபை வளாகத்துக்குள்நுழைந்தனர்.
ஆனால், இவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். சட்டசபை வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதில் போலீஸ் வாகனங்களும் தப்பவில்லை.
தொடர்ந்து சட்டசபைக்குள்ளே நுழைந்ச இந்தக் கும்பல் மேஜை நாற்காலிகளை உடைத்தெறிந்தனர். ஜன்னல்களைநொறுக்கினர். வழியில் இருந்த பொருள்களையெல்லாம் உடைத்தனர்.
பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கான போலீசார் நின்றிருந்தும் கூட அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
போலீசார் சுதாரிப்பதற்குள் சட்டசபைக்குள் நுழைந்துவிட்ட இந்தக் கும்பல் சபையை சூறையாடியது. சுமார்அரைமணி நேரம் இந்த சூறையாடல் தொடர்ந்தது. இதன் பின்னர் தான் கும்பலை போலீசாரால் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர முடிந்தது.
கும்பல் உள்ளே நுழைந்தபோது சட்டசபைக் கூட்டம் உணவு இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இதனால் பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் வெளியில் சென்றிருந்தனர்.
சில எம்.எல்.ஏக்களும் பத்திரிக்கையாளர்களும் தான் உள்ளே இருந்தனர். அவர்கள் இந்தக் கும்பலிடம் இருந்துஉயிர் தப்பி சிதறி ஓடினர்.
குஜராத் முழுவதும் மீண்டும் கலவரம்:
அயோத்தியில் தூண் தான நிகழ்ச்சியையொட்டி குஜராத்திலும் பல இடங்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.இதையடுத்து மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரமும், தீவைப்பும் நடந்து வருகிறது.
நகரில் பல வீடுகள் எரிந்தவண்ணம் உள்ளன. போலீசார் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் தொடங்கிய புதிய வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் தான் இங்குவன்முறைகளில் 700 பேர் வரை பலியாயினர்.
மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் குஜராத்தின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
வி.எச்.பிக்கு முஸ்லீம்கள் பாராட்டு:
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து சர்ச்சைக்குரிய இடத்தில் புகாமல் வெளியிலேயே தூண் தானநிகழ்ச்சியை நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு பாபர் மசூதிக் கமிட்டி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications