ஆண்டிப்பட்டி தொகுதியில் அரசு பஸ் சர்வீஸ் துவக்கம்
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இடைத் தேர்தலின் போது, தான் வெற்றியடைந்தால் ஆண்டிப்பட்டியில் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என்றுஜெயலலிதா அறிவித்திருந்தார். அதே போல் ஆண்டிப்பட்டிக்கு பஸ் இயக்கப்படும் என்று சனிக்கிழமை முதல்வர்ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்படி இன்று மாலை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்து வைக்க ஆண்டிப்பட்டியில் அரசுபஸ் போக்குவரத்து தொடங்கியது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அடங்கிய மண்ணூ
வெள்ளிமலையில் மீண்டும் அரசு பஸ் வசதி துவங்கியுள்ள நிலையில், பொன்னம்படுகை, தாழையூத்து,கணேசபுரம், தேனி, ஆண்டிப்பட்டி, மஞ்சனூத்து ஆகிய ஊர்களுக்கு கூடுதல் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.
காமராஜபுரம், தாழையூத்து ஆகிய ஊர்களுக்கு மதுரையில் இருந்து விரைவில் மீண்டும் பஸ்கள் இயக்கப்படஉள்ளன.
அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியதையடுத்து, ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும்நிறைவேற்றப்படும் என்று ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications