சமையல் காஸ் விலை ரூ.20 குறைப்பு
டெல்லி:
பட்ஜெட்டில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.40 உயர்த்தப்பட்ட சமையல் காஸ் விலை, தற்போது ரூ.20குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் சமையல் காஸ், கெரசின்ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. ஒரு சிலிண்டர் விலை ரூ.40ம், ஒரு லிட்டர் கெரசின் ரூ.1.50ம்உயர்த்தப்பட்டன.
சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. பெண்கள் அமைப்பினர்பிரதமரை நேரில் சந்தித்து விலையைக் குறைக்கும்படி கோரினர். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளகட்சிகளும் இந்த விலையுயர்வை வாபஸ் பெறும்படி கோரின.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வாஜ்பாய் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காஸ் விலையைரூ.20 குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம்நாயக், காஸ்விலையில் ரூ.20 குறைப்பதாக அறிவித்தார்.
இதன்படி சென்னையில் ஒரு காஸ் சிலிண்டரின் விலை ரூ.247.40 ஆக இருக்கும். ஆனால் கெரசின் விலைகுறைப்பு பற்றி ராம்நாயக் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications