கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கவே இந்த ரெய்ட்: கருணாநிதி
சென்னை:
திமுகவின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே திமுக பிரமுகர்கள் வீடுகளில் அதிமுக அரசுசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை)கூறினார்.
சென்னையில் இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தகுந்த ஆதாரங்கள் ஏதும் இன்றி வேண்டுமென்றே முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டில்அதிமுக அரசு சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கழகத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் தமிழக அரசு சோதனை என்ற பெயரில்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், அந்தக் காலத்தில் (?) ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டபொருட்களோடு ஒப்பிடும்போது, தற்போது கைப்பற்றப்பட்டவை சிறு தூசு என்பது உங்களுக்கே தெரியும்.
சில பத்திரிக்கைகள் இந்த ரெய்டுகள் பற்றித் திரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றின் மீது வழக்குகள்தொடர்வது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications