மற்றொரு மாஜி திமுக அமைச்சர் வீட்டில் ரெய்டு
மதுரை:
திமுக வி.ஐ.பி.க்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதை தொடர்ந்து, இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது.
திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சுரேஷ் ராஜன், பெரியசாமி, மதுரை மாநகரமுன்னாள் மேயர் குழந்தை வேலு மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள்ஆகியோரின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து சோதனை நடத்தி பல ஆவணங்களைலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து திமுக பிரமுகரர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மதுரை கே.கே.நகரில் உள்ள சமயநல்லூர் செல்வராஜ் வீட்டிற்கும் நேற்று சென்ற போலீசார், அதுபூட்டியிருந்ததால் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு செல்வராஜ் முன்னிலையில், போலீசார் சீலை உடைத்து சோதனை நடத்தஆரம்பித்தனர்.
அங்கு தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications