டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது
டெல்லி:
பாதுகாப்புத்துறை ஆவணங்கள் வைத்திருந்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை டெல்லி சிறப்பு படை போலீசார்கைது செய்தனர்.
நேற்று (சனிக்கிழமை) இரவு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே உள்ள பப்ளிக் டெலிபோன்பூத்தில் ஒருவன் பாகிஸ்தானில் உள்ள ஒருவனுக்கு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
சந்தேகப்பட்ட டெல்லி சிறப்பு போலீசார் அவனை கைது செய்து, அவனிடம் இருந்து இந்திய பாதுகாப்புத்துறைசம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அவனை விசாரித்ததில் அவன் பெயர் முகமது அஸ்லாம் என்றும் அவன் ஒரு கல்லூரி பேராசிரியர் என்றும் தெரியவந்தது.
வடக்கு டெல்லியில் உள்ள முஸ்தாபாபாத்தில் வசித்துக் கொண்டே இந்தியப் பாதுகாப்பு தொடர்பாக உளவறிந்துபாகிஸ்தானுக்கு அவன் அவ்வப்போது தகவல் தெரிவித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் அவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications