950 நெல் கொள்முதல் நிலையங்கள் அதிரடி மூடல்
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 950 கொள்முதல் நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனத்தில் வழக்கமாக டிசம்பர் மாதத்திலேயேஅரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விடும்.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் கொள்முதல் நிலையம்திறக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதிகளில் பருவம் தவறிய மழையால் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமாகின.இதனால் நெல்லின் நிறம் மாறியதுடன், தரமும் குறைந்தது.
இதனால் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும், விவசாயிகளுக்கு போதிய அளவு விலை கிடைக்கவில்லை.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 950 நேரடி கொள்முதல் நிலையங்களையும் சனிக்கிழமையுடன் மூடிவிடும்படிஅரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி மாலை வரை டோக்கன் பெற்ற விவசாயிகளின் மூடைகளை மட்டும் கொள்முதல் செய்யவும்,ஏப்ரல் 15ம் தேதி வரை தாலுகா தலைநகரங்களில் உள்ள உணவு கிடங்குகளுக்கு, விவசாயிகள் தங்கள் நெல்லைகொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்தவிவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைக் கண்டித்து பல இடங்களில் விவசாயிகள் மறியல்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைவர்கள் கண்டனம்:
இதற்கிடையே நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு மூட உத்தரவிட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் நல்லக்கண்ணு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோர் கடுமையாகக்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications