20ம் தேதி துக்க நாள்: போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு
சென்னை:
போனஸ் தொகை இது வரை வழங்காகதை கண்டித்து வரும் 20ம் தேதி துக்க நாளாக அனுஷ்டிக்க போவதாகபோக்குவரத்துத்துறை ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் செளந்தரராஜன் கூறுகையில்,
தீபாவளி போனஸ் தொகை மற்றும் பொங்கல் ஊக்கத் தொகையை ஏப்ரல் 14ம் தேதிக்குள் கொடுப்பதாக தமிழகஅரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடவில்லை.
இதைக் கண்டித்து வரும் 18ம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸை அரசிடம் வழங்குவோம். மேலும் 20ம்தேதி துக்க நாளாகக் கடைபிடிப்போம்.
தொடர்ந்து இது குறித்து அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது என்று செளந்தரராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications