வி.எச்.பி. தலைவர் 2வது நாளாக உண்ணாவிரதம்
அயோத்தி:
அயோத்தியில் கர சேவகர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்தலைவர் அசோக் சிங்கால் இன்று (திங்கள்கிழமை) 2வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அயோத்தியில் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி முடிந்து விட்டதால் அங்கு தற்போது பதற்றம் எதுவும் இல்லைஎன்று கூறும் சிங்கால், இதனால் அங்குள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களைத் தடுக்கக் கூடாது என்றும்கோரினார்.
நேற்று பகல் 12.45 மணிக்கு திடீரென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சிங்கால், தன்னுடைய கோரிக்கையில்இன்னும் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வி.எச்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் அவருடையஉடல்நலம் சீராகத்தான் உள்ளது என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"வி.எச்.பியை தடை செய்ய வேண்டும்"
இதற்கிடையே, ஒரிசா சட்டசபையைத் தாக்கிய வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளகட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த சனிக்கிழமை ஒரிசா சட்டசபைக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் நுழைந்து தாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் சட்டசபையில் சில இடங்கள் சேதமடைந்தன.
இது குறித்து இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயககூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தடி.பி.யாதவ் பேசுகையில்,
மத ஒற்றுமை குலைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வி.எச்.பி., பஜ்ரங்தள் அமைப்புகள் ஒரிசாசட்டசபையை தாக்கியது ஜனநாயகத்தை குலைப்பது போல் உள்ளது.
இந்த இரு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று யாதவ் கூறினார்.
இதே போல் சமதா கட்சியை சேர்ந்த பிரபுநாத் சிங் பேசுகையில், பொடோ சட்டத்தின் மூலம் இந்த இருஅமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்த அமைப்புகளின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தநிடீஷ் சென்குப்தாவும் வலியுறுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications