சசிகலா உறவினரை உதறினார் ஜெயலலிதா
சென்னை:
தோழி சசிகலாவின் உறவினர் மகாதேவனுக்கும், அதிமுகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும்,அவருடைய கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர் கே.வி.மகாதேவன். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய புள்ளிகள் வரிசையில்மகாதவேனும் இடம் பெற்றிருந்தார்.
ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த ராஜசேகரன் கடந்த 1999ம் ஆண்டு தாக்கப்பட்டார். போயஸ் தோட்டத்தில்வைத்து ஜெயலலிதா, சசிகலா மற்றும் மகாதேவன் ஆகியோர் தாக்கியதாக அப்போது கூறப்பட்டது.
இதில் சசிகலா தன்னை செருப்பால் அடித்ததாகவும், மகாதேவன் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் ராஜசேகரன்கூறினார்.
இந்த நிலையில் மகாதேவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஜெயலலிதா அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகாதேவனுடனான தொடர்பை ஒரு வருடத்திற்கு முன்பே துண்டித்து விட்டேன். எனது போயஸ் தோட்டஇல்லத்திற்கு அவர் வரக் கூடாது என்றும் தடை போட்டுள்ளேன்.
இருப்பினும் தொடர்ந்து எனது பெயரைப் பயன்படுத்தி தனக்கு சாதகமாக செயல்படுமாறு அரசு அதிகாரிகளையும்,போலீஸ் அதிகாரிகளையும் மகாதேவன் நிர்பந்தப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
அவரது மிரட்டலுக்கு அதிகாரிகள் யாரும் பயப்பட வேண்டாம். அவரது கோரிக்கை எதற்கும் செவிசாய்க்கவும்வேண்டாம்.
மகாதேவனுடன் தொடர்பு வைத்திருக்கும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவால் தடை விதிக்கப்பட்டுள்ள சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் மகாதேவன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சுதாகரனை தனது வளர்ப்பு மகன் இல்லையென்று ஜெயலலிதா கூறி விட்டார். தற்போதுமகாதேவனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications