காணாமல் போன முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாலன் படுகொலை: ஒருவர் கைது
சென்னை:
காணாமல் போன முன்னாள் எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று (திங்கள்கிழமை) இரவு கைது செய்தனர்.
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலிருந்தே அக்கட்சியிலிருந்த பாலன், சென்ற சட்டசபைத் தேர்தலில்அதிமுக பெரும் தோல்வியடைந்த பிறகு கடந்த 1997ல் திமுகவில் சேர்ந்தார். முன்னதாக 1991 முதல் 1996 வரைசைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி காலையில் வாக்கிங் சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை.அதிமுக தலைமையின் அறிவுரையின்ப்டிதான் அவரை போலீசார் கடத்திச் சென்று விட்டதாக திமுகவினர் புகார்செய்தனர்.
இதற்கிடையே அவரை விரைவில் தேடிக் கண்டுபிடிக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்த அவருடைய மகன் மணிமாறன், தமிழக ஆளுநரிடமும் இதுகுறித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிமாறனுடைய மனு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், பாலனைசி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாலா என்ற பாலமுருகன் என்பவனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துவிசாரித்தனர். அப்போது காணாமல் போன நான்கு நாட்களிலேயே பாலன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
ரூ.1 கோடி கேட்டு பாலனைக் கடத்திய ஒரு கும்பல், நான்கு நாட்களாக அவரைச் சித்திரவதை செய்து பின்னர்கொன்று விட்டது. கொலையை மறைப்பதற்காக அவருடைய உடலை எரித்து கடலில் கரைத்து விட்டதாகவும்போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலமுருகன் தவிர இந்தக் கொலையில் செந்தில்குமார், மாணிக்கம் ஆகியோர் உள்பட ஒன்பது பேருக்கு தொடர்புஇருப்பதும் தெரிய வந்துள்ளது.
பலரிடமும் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த சம்பவங்களில் செந்தில்குமார் ஈடுபட்டிருந்ததும்அவனுடைய நெருங்கிய நண்பன்தான் மாணிக்கம் என்பதும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள இந்த ஒன்பது பேரையும் கைது செய்தால், பாலன் கொலை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்பதால், அவர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கைதாகியுள்ள பாலமுருகனை ஏப்ரல் 1ம் தேதி வரை காவலில் வைக்குமாறு சைதாப்பேட்டை 9வதுநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications