காஷ்மீர்: மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
பாரமுல்லா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் புகுந்த 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர்நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் மிரன்கண்ட் என்ற இடத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலைஅடுத்து நேற்று (திங்கள்கிழமை) மாலை அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் வீடு வீடாகச் சென்று சோதனைசெய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால்சுட்டவாறே ஓடத் துவங்கினர். இதனால் பாதுகாப்புப் படையினரும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் தீவிரவாதிகள் இருவரும் அருகில் இருந்த ஒரு மசூதியில் புகுந்து கொண்டு அங்கிருந்துபாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாதுகாப்புப் படை போலீசார் அந்த மசூதியைமுற்றுகையிட்டனர்.
பிறகு தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டன. அதன் பிறகு அவர்களைசரணடையுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் சரணடையாமல் இரவு முழுவதும் தொடர்ந்துதுப்பாக்கியால் சுட்டவண்ணம் இருந்தனர்.
தொடர்ந்து 14 மணி நேரம் அவர்கள் சரணடையாததால், வேறு வழியில்லாமல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலைதீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர்.
நீண்ட நேரமாகியும் தீவிரவாதிகள் சரணடையாததால் தான் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதனால் மசூதிக்குஎந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications