தாய்லாந்தில் அமைதிப் பேச்சு: புலிகள் யோசனை
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால், தாய்லாந்தில் நடத்தலாம்என்று விடுதலைப்புலிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்தே தொடங்கிய தற்காலிகப் போர்நிறுத்தம், கடந்த பிப்ரவரி 22ம் தேதியிலிருந்தநிரந்தரப் போர்நிறுத்தமாக மாறியது.
இதற்கிடையே இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சுவார்த்தையை எங்கு நடத்தலாம் என்று பல்வேறு விதமாகயூகங்களும் யோசனைகளும் கிளம்பி வருகின்றன.
தங்களுடைய அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தென்இந்தியாவின் ஏதாவது ஒரு நகரில் (சென்னை, பெங்களூர் அல்லது திருவனந்தபுரம்) பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று புலிகள் முதலில் யோசனை தெரிவித்தனர். இந்திய அரசிடம் அவர்கள் அனுமதியும் கேட்டுவிட்டனர்.
இதற்கு இந்தியாவின் பல கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முன்னாள் இந்தியப் பிரதமர்ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவம் காரணமாகவே இந்த எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனாலும் இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் தாய்லாந்தில் வைத்து பேச்சுநடத்தலாம் என்று புலிகள் புதிய யோசனையைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையை எங்கே, எப்போதுநடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே வரும் 25ம் தேதி இலங்கை வரும் பாலசிங்கம், வன்னி சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனைச் சந்திக்கவுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications