சூதாட்ட விடுதி நடத்திய 9 அதிமுகவினர் நீக்கம்
சென்னை:
சூதாட்ட விடுதி நடத்தி வந்த கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 9 பேரை அதிமுகவிலிருந்து நீக்கி தமிழகமுதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
கட்சி விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் மீறும் வகையில் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேலு மற்றும் 8அதிமுகவினர் சூதாட்ட விடுதியை நடத்தி வந்தனர். இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்துஇவர்கள் நீக்கப்படுகிறார்கள்.
சூதாட்ட விடுதி நடத்தியதற்கு போலீசார், திமுகவினர் மற்றும் தமாகாவினரும் கூட உடந்தையாக இருந்துள்ளனர்.
தவறு செய்யும் அதிமுகவினர் மீது போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளேன்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications