எனது தந்தை உயிருடன் இருக்கிறார்: போலீசார் மீது பாலன் மகன் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனது தந்தை உயிருடன் தான் உள்ளார். இது தொடர்பான வழக்கை திசை திருப்புவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார்நாடகமாடுகின்றனர் என்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலனின் மகன் மணிமாறன் தெரிவித்தார்.

திமுக பொதுக்குழு உறுப்பினருமான எம்.கே.பாலன், கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை வாக்கிங் சென்றவர்திரும்பவில்லை.

அதிமுக மேலிடத்தின் உத்தரவுப்படி போலீசார் தான் அவரை பிடித்துக் கொண்டு சென்றதாக அவரது மகன் உட்படதிமுகவினர் கூறி வந்தனர்.

இதையடுத்து பாலனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி அவரது மகன் மணிமாறன் ஆள்கொணர்வு மனுஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார்விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில் பாலன் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது உடலை எரித்து விட்டதாகவும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பாலமுருகன் என்ற ஒருவரையும் போலீசார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் பெற, பாலனின் மகன் மணிமாறன் செவ்வாய்க்கிழமை தனதுவக்கீல்களுடன் உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:

எனது தந்தையைக் கடத்தி சென்ற உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதற்காக, அவரைக் கொலை செய்து எரித்துவிட்டதாக போலீசார் நாடகமாடுகின்றனர். எனது அப்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன்.

சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிய வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வழக்கை திசை திருப்ப சி.பி.சி.ஐ.டி.போலீசார் நாடகமாடுகின்றனர் என்று அவரது மகன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+