ஜெ. காரை வழிமறிக்க முயன்ற பார்வையற்ற மாணவ-மாணவிகள் கைது
சென்னை:
உதவித் தொகையை திரும்பவும் வழங்கக் கோரி போராட்டம் நடத்திய பார்வையற்ற மாணவ-மாணவியர், தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் காரை வழிமறிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான உதவித் தொகையை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அதைத்திரும்பவும் வழங்கக் கோரி சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் கண்ணகி சிலை இருந்த இடத்திற்கு அருகில்பார்வையற்ற மாணவ-மாணவிகள் இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றார். சாலை மறியலைக் கைவிடுமாறு மாணவ-மாணவியரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜெயலலிதா வந்துகொண்டிருந்த காரை வழிமறிக்கவும் அவர்கள் முயன்றனர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்து நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவ-மாணவிகளைப் போலீசார்கைது செய்தனர்.
சாலை மறியல் காரணமாக காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications