தமிழக பட்ஜெட் 27ம் தேதி தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 27ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் முடிவடைந்த பிறகு, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டவுடன் மறு தேதி அறிவிக்கப்படாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 27ம் தேதி தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல்செய்யவுள்ளார்.
பின்னர் மறுநாளே பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதமும் தொடங்கும்.
ஏப்ரல் மாத இறுதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதா இத்தகவலை உறுதி செய்தார்.












Click it and Unblock the Notifications