சென்னை அருகே மண்ணுக்குள் புதைந்து 2 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே ஆதம்பாக்கம் என்ற இடத்தில் மண்ணுக்குள் புதைந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆதம்பாக்கத்தில் உள்ள புதுக் காலனி என்ற இடத்தில் பாதாள சாக்கடை தோண்டும் பணி நடந்து கொண்டிருந்தது.அதில் சில பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது 15 அடி பள்ளத்திற்குள் நின்று கொண்டு மண்ணைத் தோண்டியபோது திடீரென மண் சரிந்து விழுந்தது.இதில் ரமேஷ், ஷியாம் மற்றும் சுபாஷ் ஆகிய 3 பேரும் புதைந்தனர்.
பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத்தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியைத் துவக்கினர்.
மண்ணை அகற்றி 3 பேரும் மீட்கப்பட்டனர். ஆனால் ரமேஷ் ஏற்கனவே இறந்திருந்தார். ஷியாம் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும்மூச்சுத் திணறி இறந்தார்.
இறந்த இரண்டு பேரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சுபாஷ் மட்டும் உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications