குஜராத்தில் தொடரும் வன்முறை: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

மார்ச் 15க்குப் பிறகு குஜராத்தில் தொடரும் வன்முறை காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 16ஆகஅதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் 58 கர சேவகர்கள் எரிக்கப்பட்டதையடுத்து குஜராத்தில்ஏற்பட்ட பயங்கரமான வன்முறைச் சம்பவங்களில் சுமார் 650 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கடந்த வாரம் அமைதிக்குத் திரும்பிய குஜராத்தில், மார்ச் 15ம் தேதி இரவிலிருந்து மீண்டும் வன்முறைவெடித்தது.

மொடாசா மற்றும் பரூச்சா ஆகிய நகரங்களில் நேற்று நடைபெற்ற வன்முறைகளில் இரண்டு பேர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர். வேறு இருவர் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

தேர்வு எழுதிவிட்டு பள்ளியிலிருந்து திரும்பிய போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் கத்தியால் குத்தப்பட்டார்.இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் மொடாசா நகரில் உள்ள பல கடைகளுக்குத் தீவைக்கப்பட்டது.

இதையடுத்து வன்முறைக் கும்பலைக் கலைக்கப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மொடாசா நகரில் தற்போதுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் பரோடா மற்றும் அகமதாபாத்தில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருப்பதையடுத்து, அங்குஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+