நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல் ஏன்? - ஜெ. விளக்கம்
சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் அரசே கொள்முதல்செய்ய வேண்டும் என்பதுபோல் சிலர் கூறி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை)கூறினார்.
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொது விநியோகத் தேவைக்கு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது அரசு நியதி. ஆனால் விவசாயிகள்நலன் கருதி தரம் மற்றும் ஈரப்பத தளர்வுகள் செய்து தேவைக்கு அதிகமாகவே நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.
எனினும் விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை காட்டாதது போலவும், அவர்கள் உற்பத்தி செய்யும் நெல்முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் கடமை என்பது போலவும் சிலர் கூறி வருவது அரசின்காழ்ப்புணர்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டபோது, விவசாயிகள் வேறு எங்கும் நெல்லைஎடுத்துச் செல்ல முடியாதபடி தடைகள் இருந்தன.
ஆனால் வெளி மாநிலங்களுக்கு நெல்லோ அல்லது அரிசியோ கொண்டு செல்வதற்குப் பல ஆண்டுகளாக இருந்ததடையை அதிமுக அரசுதான் தற்போது நீக்கியுள்ளது என்பதையும் வியாபாரிகளின் நெல்-அரிசி கையிருப்புகளைஇரட்டிப்பாக்கி உத்தரவிட்டதும் நாங்கள்தான் என்பதையும் மக்கள் நன்கு அறிவர்.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டதால்தான், மார்ச் 15ம் தேதி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டோம். அதற்கானபணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் வரும் 15ம் தேதி வரை வட்டக் கிடங்குகளில் நெல் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
கடந்த ஆட்சியில் படு பாதாளத்துக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளைக் கைதூக்கி விடப்படும்நடவடிக்கைகளைத்தான் அதிமுக ஆட்சி மேற்கொண்டுள்ளது என்பதை விவசாயிகளுக்கும் மக்களுக்கும்தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications