திமுகவினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பா? - ஜெ. மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகடக கூறப்படுவது உண்மையல்ல என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. கூட்டத்திற்குப்பிறகு ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் திமுக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை.அரசியல் நோக்கத்திற்காகவே இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 2002-2003ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 27ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுஎன்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications