ஜெ.யின் ஆரோக்கிய அரசியல்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் ஜெயலலிதா கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசுவது போன்றமதிப்பு வாய்ந்த ஆரோக்கிய அரசியலைக் கொஞ்ச காலம் ரசிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா 1991ல் ஆட்சிக்கு வந்த போதும் சரி, இப்போதும் சரி, இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாகஆக்கப்போகிறேன் என்று கூறுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.
கடந்த 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பாஞ்சாலங்குறிச்சியில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டகட்டபொம்மன் கோட்டை வாசல் ரோட்டில் கருணாநிதி தோரண வாயில் என்பதை அகற்றிவிட்டு சுந்தரலிங்கம்தோரண வாயில் அமைக்கப் போகிறேன் என்று அறிவித்தார்.
உண்மை என்னவென்றால், திமுக ஆட்சியில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை அமைக்கப்பட்டபோதே சுந்தரலிங்கம் தோரண வாயிலும் அமைக்கப்பட்டது தான். இவரது அரசியில் ஆரோக்கியத்துக்கு இது ஒருசான்று.
கடந்த 1989ல் திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பொலிவுடன் அமைத்தோம். 1991ல் ஆட்சிக்கு வந்தஜெயலலிதா அந்த நினைவிடத்தை விரிவுபடுத்தி, நினைவிட வாசலில் பிரம்மாண்டமான இரட்டை இலைசின்னத்தை தோரண வாயிலாக அமைத்தார்.
மீண்டும் 1996ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த காலத்தில் அந்த இரட்டை இலை வாசல் முகப்பை நாம் மாற்றிஅமைக்கவோ, அகற்றி விடவோ நினைக்கக் கூட இல்லை.
ஆனால், இப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், அண்ணா நினைவிடத்து முகப்பு வாசலின் இரு புறமும் உள்ளஉதயக் கதிர் போன்ற கோடுகளை உதய சூரியன் சின்னமெனக் கூறி அவற்றை ஒரே நாளில் இடித்தும் தேய்த்தும்விட்டார்கள்.
அது உதய சூரியன் சின்னம் என்று அந்த வளைவுகளில் அமைக்கப்பட்டது அல்ல. பொதுவாக கட்டிடங்கள்,வீடுகள் இவற்றின் வளைவுப் பகுதிகளில் மேலெழும் கதிர்கள் போல அமைப்பது கட்சிச் சார்பற்ற இடங்களிலும்இயற்கையானதே.
நல்லவேளை, தமிழகம் முழுவதும் யார் வீட்டு முகப்பிலும் இது போன்ற உதயக் கதிர் அமைப்புகள் இருக்கக்கூடாது என்று உத்தரவு போடாமல் இருக்கிறார்களே. அதற்காக மகிழ்ச்சி அடையலாம்.
பதவியேற்பு விழாவுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பழகனுக்கு 6வது வரிசையில் இடம் ஒதுக்கியது உச்சகட்டஆரோக்கிய அரசியல் அல்லவா.
பஸ் கட்டண உயர்வால் இனி போக்குவரத்துக் கழகங்களுக்கு வருமானம் அதிகமாக வருமே என்று விளக்கியபொன்முடி மீது முதல்வர் ஜெயலலிதா கடுமையாக பாய்ந்து, பூமாலை, குரங்கு, பேச அருகதையற்றவர்கள்,வெட்கமில்லாதவர்கள் என்ற வார்த்தைகளை அள்ளி வீசியது எத்தனை உயர்ந்த, சிறந்த, மதிப்பு வாய்ந்தஆரோக்கிய அரசியல்.
டேய்... டூ... உட்காருடா... இதுவே ஆரோக்கிய அரசியலின் "கோரஸ்" கோஷமாகட்டும். நாம் இதையும்கொஞ்சகாலம் ரசிப்போம் என்று கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications