லண்டன் ஹோட்டல் வழக்கு: சசிகலாவின் புதிய மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டன் ஹோட்டல் வழக்கு தொடர்பான ஆவணங்களை, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை நீதிபதிஆறுமுகபெருமாள் ஆதித்தன் தள்ளுபடி செய்தார்.

லண்டனில் நட்சத்திர ஓட்டலை வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முதல்வர்ஜெயலலிதா, தினகரன் எம்.பி., சசிகலா, இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சமீபத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து முதலாவது தனி நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்கக் கோரி சசிகலா, இளவரசி ஆகியோர் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன், அவர்களுக்கு தமிழில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கொடுக்க உத்தரவிட்டார். தற்போது ஆவணங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி மும்முரமாகநடந்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை சசிகலா தரப்பில் முதலாவது தனிநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.தற்போது மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கிளரிக்கல் பணியில் உள்ளவர்கள், அதனால் முறையாகஅதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பாளர்களை கொண்டு மொழிப் பெயர்க்க வேண்டும் என்றுஅந்த மனுவில் சசிகலா கூறியிருந்தார்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஆறுமுகம்பெருமாள் ஆதித்தன், பிறப்பித்த உத்தரவில்கூறியிருப்பதாவது:

மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் தகுதி குறித்து முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு கடிதம் மூலம்கேட்கப்பட்டது. இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், இவர்கள் அனைவரும் மொழிப்பெயர்ப்பு பணிக்குதகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அவர்கள் பெஞ்ச் கிளார்க்காக பணியாற்றியிருந்தாலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின்மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள். எனவே தகுதி வாய்ந்த நபர்களை கொண்டே மொழிப்பெயர்ப்பு பணிநடந்து வருகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+