தீவிரமடைந்தது நெய்வேலி ஊழியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தப்போராட்டத்தை காலவரையின்றி நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.

நெய்வேலி அனல் மின் நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரி அதன் ஊழியர்கள் போராடிவருகின்றனர். இதை வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தங்களது போராட்டத்தை காலவரையின்றி நீட்டிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நெய்வேலி மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் என அனைவரும்இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் முழு அளவில் இருப்பதாக போராட்டக் குழுவினர்தெரிவித்துள்ளனர்.

நெய்வேலி ஊழியர்கள் போராட்டம் காலவரையின்றி நீடித்தால் தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில்மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழக மின்வாரிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நெய்வேலியில் மொத்தம் உள்ள 7 மின் உற்பத்தி உலைகளில் இரண்டாவது உலை மட்டுமே தற்போது இயங்கிக்கொண்டுள்ளது. வேலைநிறுத்தம் நீடித்தால் அதுவும் நிறுத்தப்பட்டு விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+