குளித்துக் கொண்டிருந்த பெண்ணை கைது செய்ய முயன்ற போலீஸ் அதிகாரி
சென்னை:
விசாரணைக்கு சென்றிருந்த வீட்டில் பாத்ரூமுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணைக்கைது செய்ய முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் தலைவராக இருப்பவர் குப்பன். இவரது தங்கை காமாட்சி.
ஒரு மோதல் காரணமாக குப்பனின் வீட்டுக்கு விசாரணைக்கு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் சென்றுள்ளார்.அப்போது வீட்டில் குப்பன் இல்லை. காமாட்சி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் யார் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே நுழைந்த சப்-இன்ஸ்பெக்டரிடம், தான் குளித்துக்கொண்டிருப்பதாகவும் காத்திருக்குமாறும் காமாட்சி கூறியுள்ளார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத சப் இன்ஸ்பெக்டர் பாத்ரூமை பலமாக தட்டித் திறந்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன காமாட்சி, சேலையை மேலே போர்த்திக் கொண்டு குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் இப்படியாநடப்பது என்று கதறியுள்ளார்.
ஆனால் அதையும் கண்டு கொள்ளாத சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக வந்து ஜீப்பில் ஏறு என்று அதட்டியுள்ளார்.உடனடியாக இந்த இடத்தை விட்டுச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று காமாட்சி கோபமாககூறியதையடுத்து சம்பந்தம் அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பின்னர் பக்கத்து வீட்டில் இருந்த குப்பனின் தந்தை, அவரது தம்பி ஆகியோரை ஜீப்பில் ஏற்றி போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் சம்பந்தம்.
பின்னர் குப்பன் வீடு திரும்பியதும் நடந்த சம்பவம் குறித்து கூறி காமாட்சி கதறியுள்ளார். இதையடுத்து போலீஸ்நிலையத்திற்கு தனது வக்கீல் வீரப்பனுடன் சென்றார் குப்பன். ஒரு பெண் என்றும் பாராமல் இப்படியா நடந்துகொள்வது என்று அவர்கள் சம்பந்தத்திடம் கேட்டுள்ளனர்.
அதன் பிறகு குப்பனின் தந்தையை ஜாமீனில் விடுவதாகவும், வழக்கில் சம்பந்தப்படாத குப்பனின் தம்பியையும்விடுவிப்பதாக சம்பந்தம் கூறினார்.
சப் இன்ஸ்பெக்டரின் அத்துமீறிய செயல் குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், தமிழக முதல்வர்,செங்கை சரக டிஐஜி மற்றும் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் ஆகிய இடங்களில் குப்பன் புகார்செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications