குளச்சலில் ரூ.2,000 கோடியில் துறைமுகம்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ரூ.2,000 கோடி மதிப்பில் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டுஜனவரி மாதம் துவங்கி 2020ல் முடிவடையும் என்று மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலுகூறினார்.
சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ரூ.2,000 கோடி செலவில் குளச்சலில் துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக குளச்சலில் 1,200 ஹெக்டேர்நிலப்பரப்பில் துறைகம், ஊழியர்களுக்கான இருப்பிடம் மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவைஅனைத்தும் அடங்கிய புது நகரம் ஒன்றும் இங்கு உருவாக்கப்படும்.
2020ல் இந்தப் பணிகள் முடிவடையும். இதற்கான செலவில் 70 சதவீதத்தை மலேசிய அரசு தரும். 11 சதவீதத்தைதமிழக அரசும், மீதமுள்ள 19 சதவீத நிதியை தனியார் நிறுவனங்களும் வழங்கவுள்ளன.
இரணியல் நகரிலிருந்து குளச்சல் நகர் வரை புது ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை பறக்கும் சாலைஅமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அந்தத் திட்டம்செயல்படுத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications