நெய்வேலியில் மின் சப்ளை நிறுத்தம்: மெழுகுவர்த்தி ஏற்றி மருத்துவமனைகளில சிகிச்சை
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிறுவன (என்.எல்.சி.) ஊழியர்கள் தொடர்ந்து 2வது நாளாக வேலைநிறுத்தத்தில்குதித்துள்ளதையடுத்து, அங்கு மின் சப்ளை மற்றும் குடிநீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் தற்போதுதான் நெய்வேலியில் இந்த இரு சப்ளைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பொறியாளர் தெரிவித்தார்.
பொதுவாக 2,070 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்.எல்.சியில் தற்போது 250 மெகாவாட் மட்டுமேமின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் இல்லாமல்மக்கள் மிகவும் துன்புற்று வருகின்றனர்.
நெய்வேலியில் உள்ள மருத்துவமனைகளில் கூட மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துதான் நேற்றிரவு(செவ்வாய்க்கிழமை) நோயாளிகளுக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று நொந்து போன ஒரு நோயாளிதெரிவித்தார்.
மிகவும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்படுவதால், விரைவில் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கும் நிலைஏற்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் மின் தடை பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே இன்று காலை பெங்களூரில் சில மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் 10மணி வரை இங்கு மீண்டும் மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications