கட்சி விவகாரங்களை வெளியில் பேசக் கூடாது: தமாகாவினருக்கு வாசன் எச்சரிக்கை
சென்னை:
கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசவோ, பேட்டியோ அளிக்கக் கூடாது என்று கட்சிஉறுப்பினர்களுக்கு தமாகா தலைவர் வாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரசுடன் தமாகா இணைந்தால், சிலர் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் சேரப் போவதாக சமீப காலமாகஅக்கட்சியினரே பேசி வருகின்றனர். மேலும் சிலர் வாசனிடம் நேரிடையாகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமாகா உறுப்பினர்கள் யாரும் கட்சி விவகாரங்கள் குறித்து வெளியில் பேசவோ, பேட்டியளிக்கவோ கூடாது.
கட்சிக்கு அவப் பெயரை உருவாக்க முயற்சிக்கும் தமாகாவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்சித் தலைமைதயங்காது.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைநிறைவேற்ற வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை அரசு உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று வாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications