மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது மேம்பால ஊழல் வழக்கு
சென்னை:
சென்னை நகரில் சிறு மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து விரைவில் திமுகதலைவர் கருணாநிதி மற்றும் சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது மீண்டும் வழக்குப்பதிவுசெய்யப்படும் என்று தெரிகிறது.
சென்னை நகரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது ஸ்டாலின் (அப்போதும் அவர்தான் மேயர்) முயற்சியில்அடையாறு, ராஜ்பவன், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளிட்ட 9இடங்களில் சிறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இந்த பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் மேம்பாலங்கள்கட்டியதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆட்சியின் இறுதி நாட்களின்போது அதிமுக மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறினர்.
இந்த நிலையில் கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில திமுக தோற்று, அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும்மேம்பால ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்டோரும் அப்போது கைது செய்யப்பட்டனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பிறகு இந்த பிரச்சனை கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது மேம்பால ஊழல் வழக்கு மீண்டும்விஸ்வரூபம் எடுக்கவுள்ளது. தற்போது 9 மேம்பாலங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
அவை அத்தனையும் தரத்துடன் கட்டப்பட்டுள்ளதா, அவற்றின் தாங்கு சக்தி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் நவீன அல்ட்ரா சோனார் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வுகள் முடிந்த பின்னர் முறைகேடுகள் குறித்த பட்டியல் அரசிடம் தரப்பட்டு சம்பந்தப்பட்டவர்களைக்கைது செய்ய அனுமதி கோரப்படும். அநேகமாக கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணிஆகியோர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அப்படி நேர்ந்தால் மறுபடியும் இவர்கள் கைது செய்யப்படுவார்களா அல்லது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துஅதன் பிறகு கோர்ட் அனுமதியுடன் கைது செய்யப்படுவார்களா என்று தெரியவில்லை.
எப்படி இருப்பினும் மீண்டும் பல பரபரப்பான காட்சிகள் தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் அரங்கேறலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications