அதிமுகவில் தொடர்கிறது "களை" எடுக்கும் பணி
சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுகஉறுப்பினர் ஒருவரைக் கட்சியிலிருந்து இன்று (வியாழக்கிழமை) நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
பாலன் கொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமார் மற்றும் மாணிக்கம் ஆகியோரை போலீசார் சமீபத்தில் கைதுசெய்தனர்.
இவர்களில் மாணிக்கம் சென்னை-பூங்காநகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆவார். செந்தில்குமாருடன் சேர்ந்துகொண்டு இவர் பாலனை மிரட்டி, ரூ.1 கோடி வரை கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் மாணிக்கம் நீக்கப்படுவதாக இன்று அறிவித்தார்.
கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும" கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாலும், கழகத்திற்குக்களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும் மாணிக்கம் கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் மாணிக்கத்துடன் அதிமுகவினர் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும்ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இதற்கிடையே கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி,சைதாப்பேட்டை பகுதி ஜெயலலிதா பேரவையின் இணைச் செயலாளரான ஜெகா என்ற ஜெகநாதனும்அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கரூரில் சூதாட்ட விடுதி நடத்திய முன்னாள் எம்.எல்.ஏவான வடிவேலு உள்பட ஒன்பது அதிமுகவினரை இரண்டுநாட்களுக்கு முன்புதான் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications