காஞ்சி சங்கராச்சாரியாருடன் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கோயம்புத்தூரில் முஸ்லீம் தலைவர்கள் சந்தித்துப்பேசினர்.
ஜெயேந்திர சுவாமிகள் தற்போது கோயம்பூத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அவரை, கோயம்புத்தூர் மாவட்ட சுன்னத் ஜமாத் தலைவர் ஜமோசாஅகமது தலைமையிலான ஒரு குழுவும், கோயம்புத்தூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர்முகம்மது அலி தலைமையில் ஒரு குழுவும் சந்தித்துப் பேசின.
அயோத்திப் பிரச்சினையில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டு விடாமல் தீர்வு கண்டதற்காக இந்த இருகுழுவினரும் சங்கராச்சாரியாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications