கொலை வழக்கு: மிசா பாண்டியன் விடுதலை
மதுரை:
நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மதுரை மாநகர முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன் உள்பட 7பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மிசா பாண்டியனின் மைத்துனர் ராஜா மற்றும் மதுரை-ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் உள்பட 12 பேர்சேர்ந்து ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் ரூ.25,000 முதலீடு செய்திருந்தனர்.
கடந்த 1997ம் ஆண்டு இந்நிதி நிறுவனத்தின் மூலம் மனோகரன் என்பவருக்கு ரூ.1 லட்சம் ராஜா ஜாமீன்கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். ஆனால் மனோகரன் தன் கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை.
இதையடுத்து மனோகரனிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறும்படி ராஜாவை ஜெகதீசன் வற்புறுத்தியுள்ளார்.இவ்விஷயத்தை அப்போது துணை மேயராக இருந்த மிசா பாண்டியனிடம் ராஜா கூறினார்.
தன் மைத்துனர் ராஜாவிடம் பணம் கேட்கக் கூடாது என்று ஜெகதீசனிடம் மிசா பாண்டியன் எச்சரித்தார். இதனால்அவர்களிடையே முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மாலை 4 மணிக்கு ஜெகதீசன் தன் அலுவலகத்தில்கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
மதுரை நகரையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்தக் கொலைச் சம்பவத்தில் மிசா பாண்டியனும் முக்கியக்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
ஜெகதீசன் கொலை தொடர்பாக அரிவாள் பாண்டி, வரிச்சியூர் செல்வம், பப்பி செல்வம், பாம்பன் ஆறுமுகம்,பைப்குமார் மற்றும் பாபு ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் தேடிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி செங்கல்பட்டுநீதிமன்றத்தில் மிசா பாண்டியன் சரணடைந்தார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மிசா பாண்டியன், மீண்டும் மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டுகவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications