ஏரி, குளங்களை தூர் வாரப் போகிறார் ராமதாஸ் மகன்
சென்னை:
தமிழகத்தில் 1,000 குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களைத் தூர் வார பசுமைத் தாயகம் அமைப்புதிட்டமிட்டுள்ளது.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனுமானடாக்டர் அன்புமணி இதுகுறித்துக் கூறுகையில்,
தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு குறித்த அறிவு மிகவும் குறைவாக உள்ளது. மழை நீர் சேகரிப்பின் அவசியம்குறித்து தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி காரணமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள்தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இப்போது கோடைக்காலம் துவங்கி விட்டது. எனவே ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் ஆகியவைவிரைவில் வற்ற ஆரம்பித்து விடும். இப்போதே அவற்றைத் தூர் வாரி சரி செய்து வைத்தால், மழைக் காலத்தில்பெய்யும் மழையை உரிய முறையில் சேமித்து வைக்க முடியும்.
எனவே தமிழகம் முழுவதிலும் 1,000 ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்களைத் தூர் வார பசுமைத் தாயகம்அமைப்பு முடிவு செய்துள்ளது.
சென்னையில் பசுமைத் தாயகம் சார்பில் நீர் ஆதார நிர்வாகம் குறித்த கருத்தரங்கு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.மத்திய அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி, முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications