தாகம் தணிக்க வந்து உயிரை விட்ட 3 மான்கள்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அருகே தாகம் தணிக்க தண்ணீர் தேடி வந்த 3 மான்கள் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தன.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே காட்டுப் பகுதி உள்ளது. இங்கு கடும் வெயில் நிலவுவதால் காட்டுப் பகுதியில்இருந்த மான்கள் தண்ணீர் தேடி அரூர் பகுதிக்குள் நுழைந்தன.

அந்தப் பகுதியில் தண்ணீர் தேடி 5 மான்கள் அலைந்தபோது, சில நாய்கள் அவற்றை துரத்தியுள்ளன.அவற்றிடமிருந்து தப்பி ஓடிவந்த மான்கள், எதிர்பாராத விதமாக பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டன.

இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்துமான்களை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் 2 மான்கள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டன. 3 மான்கள் இறந்துவிட்டன.

பிடிபட்ட மான்களில் ஒன்று மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடப்பட்டது. இன்னொரு மான்காயமடைந்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+