இலங்கை: கண்காணிப்புக் குழுவுக்கு வேலையே இல்லை
கொழும்பு:
இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை என்பதால் அங்கு கண்காணிப்புக்குழுக்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிரான்பெர்னண்டோ கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை புலிகள் உடனடியாக மறுத்தனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசும்புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளோ, இலங்கை அரசோ போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை என்றுபெர்னாண்டோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
யாரும் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறவில்லை. அதனால் கண்காணிப்புக் குழுக்களுக்கு வேலையேஇல்லாமல் போய்விட்டது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் அரசு ஆக்கிரமிப்புப் பகுதியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. கண்காணிப்புக்குழுவுக்கும் இது குறித்து எந்தத் தகவலும்வரவில்லை. அந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும்.
அமைதிப்பேச்சுவார்த்தை கண்டிப்பாக இலங்கையில் நடக்காது. ஏதாவது ஒரு வெளிநாட்டில்தான் பேச்சுவார்த்தைநடக்கும். பேச்சுவார்த்தைக்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்குமறு நார்வே தூதுக் குழுவிடம் இலங்கை அரசுகோரியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.இப்பேச்சுவார்த்தை வெகு விரைவில் நடக்கவுள்ளது. இந்த வருட மத்தியில் முழுப் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிடும்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, அமைதிப்பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியே என்று பெர்னாண்டோ கூறினார்.
வரும் 25ம் தேதி மாலத்தீவு வழியாக இலங்கைக்கு வரும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம், தங்களமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை வெகு விரைவில் தொடங்கும் என்றும் மாலத்தீவு அல்லது தாய்லாந்தில்பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications