சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட குவைத் பெண்: குழப்பத்தில் அதிகாரிகள்
சென்னை:
போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவைச் சேர்ந்த காதலருடன், குவைத் நாட்டிலிருந்து வந்த பெண் சென்னைவிமான நிலையத்தில் பிடிபட்டார். தன்னைத் திருப்பி அனுப்பினால் கல்லால் அடிப்பார்கள் என்று அந்தப் பெண்கெஞ்சுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழித்து நிற்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் காதர் பாஷா. குவைத்தில் இவர் காண்டிராக்ட் மூலம் வேலை பார்த்துவந்தார். அந்த நாட்டைச் சேர்ந்த தலால் ஆஸ்மி என்ற பெண்ணுக்கும் காதர் பாஷாவுக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில் காதர் பாஷாவின் காண்டிராக்ட் காலம் முடிவடைந்தது. இதையடுத்து அவர் இந்தியா திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் காதலியை விட்டு பிரிய அவருக்கு மனமில்லை. அதேசமயம், தலால்ஆஸ்மியிடம் பாஸ்போர்ட் இல்லை, உடனடியாக எடுக்கவும் இயலாத நிலை.
என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு, இந்தியாவிலிருந்து குவைத் வந்த ஒரு பெண் சிக்கினார். அவரிடம்பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்ட அவர்கள் அந்த போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்தனர். விமானநிலையத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தெரிய வந்தது.
இதையடுத்து பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் தலால் ஆஸ்மி கெஞ்சினார். தங்களது காதல் விவகாரத்தை சொல்லியஅவர், வேறு காரணத்திற்காக இங்கு வரவில்லை. என்னைத் திருப்பி அனுப்பினால் குவைத் அதிகாரிகள் கல்லால்அடித்துக் கொன்று விடுவார்கள். தயவு செய்து திருப்பி அனுப்பாதீர்கள் என்று கெஞ்சினார்.
அவரது உடல் நலம் சரியில்லையாதலால், அவரை தற்போதைக்கு அதிகாரிகள் மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர். அவர் தேறிய பின் அவரை என்ன செய்வது என்ற முடிவுக்கு வர குடியேற்றப் பிரிவுஅதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications