இந்தியாவுக்கு பாடம் கற்பிப்போம்: பாக். கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்:
தங்கள் நாட்டைத் தாக்கினால் இந்தியாவுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப் போவதாக பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
"பாகிஸ்தான் நாள்" கொண்டாட்டத்தையொட்டி நாட்டு மக்களுக்காக தொலைபேசியில் முஷாரப்உரையாற்றியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா அதிக அளவிலான படைகளைக் குவித்துள்ளது எங்களைமிகவும் கோபமடையச் செய்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானைத் தாக்கிவிட்டு இந்தியாவால் எங்கும் தப்பியோட முடியாது. நாங்கள் தக்க பதிலடிகொடுத்தே தீருவோம்.
எல்லைப் பகுதிகளில் எங்கள் படைகளும் எதற்கும் தயாராகவே உள்ளன. எங்களைத் தாக்கும் இந்தியாவுக்குத்தகுந்த பாடத்தை நாங்கள் கற்பித்தே தீருவோம் என்று அவ்வுரையில் கடுப்புடன் முஷாரப் கூறினார்.
இந்த ஆண்டு எல்லையில் ராணுவத்தினரைக் குவித்து விட்டதால் வழக்கமாக "பாகிஸ்தான் நாள்" அன்று நடைபெறவேண்டிய ராணுவ அணிவகுப்பு நடக்கவில்லை என்று தெரிவித்த முஷாரப், இந்தியாவுடன் அமைதியையேதாங்கள் விரும்புவதாகவும் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications