தீவிரமடைகிறது வீரப்பன் வேட்டை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டைதீவிரமடைந்துள்ளது.
மேட்டூர், பாலாறு, காவேரிபுரம் மற்றும் அந்தியூர் வனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழக-கர்நாடக கூட்டுஅதிரடிப் படையினர் வீரப்பனை வெகு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஏ.கே. 47 உள்ளிட்ட பல்வேறு விதமான ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு அதிரடிப் படையினர் வனப்பகுதிகளில சுற்றி வருகின்றனர்.
தமிழக அதிரடிப் படையின் கூடுதல் டி.ஜி.பி. நடராஜும் கர்நாடக அதிரடிப் படையின் டி.ஐ.ஜி. தமிழ்செல்வன்ஆகிய அதிகாரிகள் ஒகேனக்கல் மற்றும் எரியூர் பகுதிகளுக்கு சென்று அதிரடிப் படையினரின் தேடுதல்வேட்டையை நேரில் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications