மலிவு விலை மது ரூ.18 ஆக உயர்வு
சென்னை:
மலிவு விலை மதுபாட்டில் வகையில் மட்டும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, ரூ.15க்கு விற்று வந்த மலிவு விலை மதுநேற்று (சனிக்கிழமை) முதல் ரூ.18ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனவே கள்ளச்சாராயத்தை ஒழிக்க100 மில்லி மலிவு விலை மது பாட்டிலை ரூ.15க்கு கடந்த புத்தாண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தியது.
விலை குறைவாதலால் இந்த மலிவு விலை மது அமோகமாக விற்பனையானது. கூலித்தொழிலாளர்கள் கூட்டம்மலிவு விலை மதுவுக்கு மாறியது.
ஆனால் 10 லட்சம் மது பாட்டில் தேவைப்படும் நிலையில் பாட்டில் பற்றாக்குறையால் 5 லட்சம் பாட்டிலேவிநியோகிக்கப்பட்டது. இதனால் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனையாகும் 20 மாவட்டத்தில் மலிவு விலைமது விற்பனை பாதித்தது.
மலிவு விலை மது கிடைப்பதில்லை என சாமானியர்கள் அதை கேட்டு வாங்குவதே இல்லை. மலிவு விலை மதுதிட்டம் தோல்வியடைந்ததால் அரசுக்கு ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை முதல் 90 பாட்டில் அடங்கிய ஒரு கேஸ் மலிவு விலை மது பாட்டில் பெட்டிக்கு ரூ.244அதிகரித்து அரசு உத்தரவிட்டது. இதற்கு முன் ஒரு கேஸ் பெட்டி ரூ. 1,234க்கு விற்கப்பட்டது. சனிக்கிழமை முதல்ஒரு கேஸ் ரூ.1,475க்கு விற்கப்படுகிறது.
இதன் படி கடைகளில் ரூ.18க்கு ஒரு மலிவு விலை மது பாட்டில் விற்கப்படுகிறது. பாட்டில் ஒன்றுக்கு ரூ.3அதிகரித்துள்ளதால் கூலி தொழிலாளர்கள் கூட்டம் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு தாவும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications