திருப்பூர் தொழிலதிபர் கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
ஈரோடு:
திருப்பூர் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த "பெல்ட் பாம்" சின்னசாமி மற்றும் அவரது கார்டிரைவரை ஈரோடு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பழனிச்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சொந்தமான மில்லுக்குசென்று விட்டு வரும் வழியில் டாடா சுமோ காரில் வந்த மர்ம கும்பல் பழனிச்சாமி மற்றும் கார் டிரைவரை கடத்திச்சென்றது.
கரூருக்கு அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பண்ணை வீட்டில் பழனிச்சாமியின் இடுப்பில் பெல்ட் வெடிகுண்டைக்கட்டி விட்டு, ரூ.10 கோடி தராவிட்டால் குண்டை வெடிக்கச் செய்து கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.
கடைசியாக ரூ.35 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பழனிச்சாமியை விடுவித்துவிட்டு தப்பிச் சென்று விட்டது மர்மகும்பல். இந்த சம்பவத்தால் திருப்பூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் அச்சத்தில் மூழ்கினர்.
கடத்தில் கும்பலை பிடிக்க போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டது. பழனிச்சாமியின் காரில் இருந்து பல்வேறுடெலிபோன் எண்கள் அடங்கிய துண்டுச் சீட்டு ஒன்றை தடயமாக வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் மூலகாரணமாக விளங்கிய "பெல்ட் பாம்" சின்னசாமி என்பவனுக்கு உதவிய 15 பேர் இது வரைகைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சின்னசாமி மற்றும் அவரது கார் டிரைவரையும் சிலதினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இது வரை பழனிச்சாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ரூ.14.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 டாடா சுமோ, ஒரு மாருதி கார், 3 பைக்குகள், 4 செல்போன், 2பெல்ட் பாம்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications