குஜராத்தில் தொடரும் வன்முறை: அகமதாபாத்தில் மீண்டும் ஊரடங்கு
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சில இடங்களில் தொடர்ந்து வன்முறை நிகழ்வதால், இங்குள்ள 5 காவல்நிலைய பகுதிகளில் தொடர்ந்து காலவரையறையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் நடந்த வன்முறையால் 650 பேர் வரை கொல்லப்பட்டனர்.பிறகு குஜராத்தில் அமைதி திரும்புவது போல் இருந்தது. ஆனால் மார்ச் 15ல் ஏற்பட்ட பதட்டத்தினால் இந்தமாநிலத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
கடந்த 2 தினங்களில் மட்டும் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் முகரம்பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் நடக்கவிருந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள குப்தா நகரில் நடந்த கலவரத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார். ஒரு சிறுவன்படுகாயமடைந்துள்ளான். இதனால் இந்த பகுதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதே நகரில் மதெளரா காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கலவரத்தில் 2 பேர்இறந்துள்ளனர். இதனால் அகமதாபாத்தில் உள்ள காலுபூர், தரியாபூர், கரஞ், ஷாபூர், ஹவேலி ஆகிய காவல்நிலைய கட்டுப்பாட்டு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காலவரையறையற்ற ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அகமதாபாத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறது.
7 பஸ்கள் எரிப்பு
இதற்கிடையில் பரோடா நகரில் சிறுபான்மையினர் 7 தனியார் சொகுசு பஸ்களை எரித்துள்ளனர்.
பரோடாவுக்கும், வகோதியா இடையில் உள்ள பிபாடியா கிராம நெடுஞ்சாலையில், சிறுபான்மையை சேர்ந்த சிலகும்பல், 7 தனியார் பஸ்களை எரித்துள்ளனர்.
அந்த கும்பல் பஸ்களில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு பஸ்களை கொளுத்தியுள்ளனர். இதனால் பஸ்ஸில்பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications