புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) அம்மாநில ஆளுநர் ரஜினி ராயின்உரையுடன் தொடங்குகிறது.
ஆளுநர் உரையைத் தொடர்ந்து, மறைந்த மக்களவை சபாநாயகர் பாலயோகி, மற்றும் மற்ற தலைவர்கள்மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவுடன் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
பிறகு நிதித்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் பாண்டிச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, வரும் 28ம் தேதி2002-2003க்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
ரங்கசாமி தாக்கல் செய்யவிருக்கும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications