நாளையாவது "பொடோ" நிறைவேறுமா?
டெல்லி:
மக்களவையில் மட்டும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபாவில் தோல்வியடைந்த "பொடோ" சட்டமசோதா, இந்த இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.
பொடோ சட்ட மசோதா எப்படியும் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் எதிர்க் கட்சிகள் அனைத்தம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் "பொடோ" விவகாரத்தில்எதிர்க் கட்சிகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டு நிற்கிறது. மக்களவையில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துவாக்களித்த இக்கட்சி, நாளைய கூட்டுக் கூட்டத்திலும் இந்நிலையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளது.
இந்நிலையில் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய், பொடோ சட்டம் நாளை நிச்சயம்நிறைவேறி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "பொடோ"வை நிச்சயம் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நாட்டின் நலனை மட்டுமல்லாது, தங்கள் கட்சியின் நலனையும் கருத்தில் கொண்டு "பொடோ" சட்டத்தைநிறைவேற்ற காங்கிரஸ் உதவ வேண்டும் என்றும் வாஜ்பாய் தெரிவித்தார்.
ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இருஅவைகளையும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications