பாஜகவில் கோஷ்டிப் பூசலுக்கு வித்திட்ட திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையில் வெடித்துள்ள புதிய மோதல் பல்வேறு சுவாரஸ்யமானகலாட்டாக்களின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள்கருதுகிறார்கள்.

அதிமுகவிலிருந்து வெளியேறிய பாஜக அதன் பிறகு திமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இணைந்த சில நாட்களிலேயேதிமுக தலைவர்களும், பாஜக தலைவர்களும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தோழமையாக இருந்தாலும் கூட, பாஜகவுக்கும் திமுகவுக்கும்இடையிலான நட்பு மிகவும் வலுவானதாக இருந்தது.

தேர்தல்களில் இட ஒதுக்கீடு சமயங்களில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இரு கட்சிகளும் நடந்துகொண்டன. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இரு கட்சிகளும் கருணாநிதி கைது சம்பவத்திற்குப் பிறகுஅடிக்கடி உரசிக் கொள்ள ஆரம்பித்தன.

கருணாநிதியைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக அரசைடிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு திமுகவைத்தது.

ஆனால் வெறும் எச்சரிக்கைகளை மட்டுமே கொடுத்து விட்டு பாஜக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது திமுகவுக்குக்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜகவின் தயவு தேவை என்பதால் அமைதி காத்தது.

ஆனாலும்கூட சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாஜக-திமுக மோதல் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேஇருந்தது. இந்தச் சமயத்தில் பாஜகவின் தமிழக பொதுச் செயலாளர் இல. கணேசனை தனக்கு சாதகமாக திமுகஇழுத்துக் கொண்டது.

தீவிர திமுக ஆதரவாளராக இல.கணேசன் மாறினாலும், கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதி மற்றும் லட்சுமணன்உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவின் நட்பைப் பெரிதும் விரும்பினர். இப்படி பாஜகவுக்குள் ஏற்பட்ட கோஷ்டிகள்மூலம் திமுக அரசியல் நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் கருணாநிதிபேசுகையில், மத்தியில் மட்டுமே பாஜகவுடன் உறவு, மாநிலத்தில் நட்பு மட்டுமே என்று கூறினார்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கோவில்களில் தொடங்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டம்தான் கருணாநிதியைப் பெரிதும் கடுப்படைய வைத்தது; திமுக-பாஜக இடையே உள்ள உறவு-நட்பைப்பற்றிப் பேச வைத்தது.

சென்னை-மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் ஜெயலலிதா தொடங்கி வைத்த அன்னதானத் திட்டதொடக்க விழாவில் பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டது, கருணாநிதியின் கண்களை ரொம்பவேஉறுத்திவிட்டது.

அதிலும் தான் மிகவும் நம்பியிருந்த இல. கணேசனும் இவ்விழாவில் கலந்து கொண்டதைப் பார்த்ததும் கருணாநிதிமிகவும்நொந்து போனார். மறுநாள் மாலை வரை (திமுக பொதுக்குழுக் கூட்டம் முடியும் வரை) பொறுத்திருந்துநிருபர்களிடம் கொட்டிவிட்டார்.

இப்போது பாஜக கூடாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியைப் புண்படுத்தும் விதத்தில் தொடர்ந்து சிலபாஜக நிர்வாகிகள் பேசி வந்த காரணத்தால்தான் பொறுக்க முடியாத நிலையில் கருணாநிதி அப்படி பேசி விட்டார்என்று இல. கணேசன் ஆதரவாளர்கள் கூறுகிறார்களாம்.

ஆனாலும், கருணாநிதியைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நல்ல திட்டத்தை அதிமுகஅரசு அமல்படுத்தினால் அதை எப்படி எதிர்க்க முடியும்? கோவில்களில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுபா.ஜ.க.வின் கொள்கைகளில் ஒன்றுதானே? எனவே அந்தத் திட்டத்தில் கலந்து கொண்டதை கருணாநிதி எப்படிவிமர்சிக்கலாம் என்று கிருபாநிதியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்களாம்.

திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, இல. கணேசன் குழுவினருக்கும், கிருபாநிதிகுழுவினருக்கும் இடையே புதிய பூசல் வெடித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. இதில்கருணாநிதியின் பேட்டி குறித்தும், புதிய சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

அப்போது பாஜக கோஷ்டிப் பூசல் பெரிய அளவில் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+