கோவில்களின் பக்தர்களுக்கு இலவச "லஞ்ச்": ராம கோபாலன் பாராட்டு
திருப்பூர்:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு தாலுகா இந்து முன்னணி சார்பில் தேசிய பாதுகாப்பு மாநாடு, திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில்நடந்தது. மாநாட்டில் ராம.கோபாலன் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் 63 கோவில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தைகளுக்கு அறவழி கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது எந்த முதல்வரும் எடுக்காத முடிவு.
கோவில்கள் தற்போது நிலை தடுமாறியுள்ளது. கோவிலின் உள் ஆத்மாவை ஜெயலலிதா புதுப்பித்து இருக்கிறார்.இது ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாவா என்றால் நான் ஆமாம் என்று சொல்வேன்.
கருணாநிதிக்கு பாஜக தன்னை விலக்கி விடுமோ என்கிற பீதி வந்து உள்ளது. அதனால்தான் தமிழக பாஜகவுடன்உறவில்லை என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.
இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு இந்துக்களோடும், இந்துத்வாவோடும் தான் கூட்டணி.அதோடு தான் வாழ்வோம், சாவோம். அதை எப்போதும் கைவிட மாட்டோம்.
இந்துத்துவத்தை பேசும்போது உயிர் பிரிந்தால் என்னைப் போல் பாக்கியசாலி இல்லை என்று ராம கோபாலன்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications