சென்னையில் பிடிபட்ட குவைத் பெண்ணுக்கு சிறை
சென்னை:
போலி பாஸ்போர்ட்டுடன் சென்னைக்கு வந்த குவைத் பெண், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 25ம் தேதி குவைத்தை சேர்ந்த தலால் பலாக் அல் ஆஸ்மீ( 22) என்ற பெண்ணும், ஆந்திர மாநிலம்கடப்பாவைச் சேர்ந்த காதர் பாட்ஷா (25) என்பவரும் குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர்.
அந்த பெண்ணை சோதனையிட்டதில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததை விமான நிலையஅதிகாரிகள் கண்டு பிடித்தனர். மேலும் அவளை விசாரித்ததில் காதரை தான் காதலித்ததாகவும், அதனால்திருமணம் செய்து கொள்வதற்காக போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததையும் ஒப்புக் கொண்டார்.
மேலும் தன்னை குவைத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அங்கு அனுப்பினால் தன்னை கல்லால்அடித்தே கொன்று விடுவார்கள் என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வந்தனர். தினமும் விமான நிலைய போலீஸ்நிலையத்தில் ஆஸ்மி வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் காதல் ஜோடியைபோலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் "மொகரம்" பண்டிகையான திங்கள்கிழமை ஆகிய மூன்று நாட்களும் விடுமுறைஎன்பதால் இந்தக் காதல் ஜோடி ஆந்திராவுக்குப் பறந்துவிட்டது.
மூன்று நாட்களையும் கடப்பாவில் சந்தோஷமாகக் கழித்த பாட்ஷா-ஆஸ்மி ஜோடி, இன்று மீண்டும் சென்னைவந்தது. அவர்கள் கேட்ட ஜாமீன் மனுவும் இன்றைக்குத்தான் விசாரணைக்கு வந்தது.
ஆனால் கடந்த மூன்று நாட்களிலும் ஆஸ்மி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போடவில்லை என்பதைஅறிந்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ஜாமீன் கிடையாது என்று கூறிவிட்டார்.
மேலும் ஆஸ்மியை 15 நாள் சிறைக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த குவைத்பெண் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications