வாக்காளர் பட்டியலை திருத்த நாளை கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் நாளைக்குள் (புதன்கிழமை) செய்துகொள்ள வேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விரும்புவோர்,
பெயர்களை நீக்க விரும்புவோர் அல்லது வேறு ஏதாவது திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்குயவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு நாளைதான் கடைசி நாளாகும். அதன் பிறகு ஏப்ரல் 7ம் தேதி வரைதிருத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications