இலங்கையில் பாலசிங்கம்
Subscribe to Oneindia Tamil
வன்னி:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் நேற்று (திங்கள்கிழமை) இலங்கை வந்துசேர்ந்தார்.
லண்டனிலிருந்து மாலத்தீவு வந்து சேர்ந்த பாலசிங்கம், அங்கிருந்து சிறப்பு கடல் விமானத்தின் மூலம் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள இரணமடு என்ற இடத்திற்குச் சென்று இறங்கினார்.
பின்னர் அங்கிருந்து வன்னிக்குச் சென்ற பாலசிங்கம், புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைச்சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கைக்குப் பாலசிங்கம் வந்த கையோடு, ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையைத் துவக்கி விடலாம் என்றநம்பிக்கையோடு நார்வே குழுவினரும் வன்னி சென்று சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications