தஞ்சை, திருவாரூரில் தொடர் தீ வைப்பில் ஈடுபட்ட 18 தீவிரவாதிகள் கைது
திருவாரூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஆண்டு நடந்த தொடர் தீ வைப்புசம்பவங்களில் தொடர்புடைய 18 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில்உள்ள வீடுகளில் அடிக்கடி திடீர் திடீரென்று தீப்பிடித்தது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாகின. இரவு நேரங்களில் நடந்த இந்த சம்பவம் குறித்துபோலீஸ் ஸ்டேஷன்களில் பல புகார்கள் கொடுக்கப்பட்டன. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால்யாரையும் கைது செய்ய முடியவில்லை.
இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள்ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களை பிடிப்பதுப் பற்றி அலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் அதிரடிதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பரூக், சவுரிராஜன், தமிழரசன், மணிவேல், அழகிரி,கலைமணி, துரையரசன், சுரேஷ், ஷேக்தாவூது, ஜெயக்குமார், திருமாள் சுந்தரம், ஜெகதீசன் உட்பட 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் இவர்கள் பயன்படுத்திய டாடா சுமோ கார், தொலைபேசி ஆகியவற்றை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் விசாரணையில் இவர்கள் அனைவரும் 2 தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் எந்த தீவிரவாத இயக்கம் என்பதைச் சொல்ல போலீசார் மறுத்து விட்டனர்.
கடலோர மாவட்டங்களில் மதக்கலவரத்தை தூண்டி விடும் முயற்சியில் இந்த தீ வைப்பு சம்பவங்களில் இவர்கள்ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய தீவிரவாத இயக்கம்
இதற்கிடையில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழர் தன்மானப்படை என்னும் புதிய முஸ்லிம் தீவிரவாத இயக்கம்ரகசியமாக தோன்றியுள்ளது.
இந்த அமைப்பில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இந்து இளைஞர்களை மூளைசலவை செய்து இந்த இயக்கத்தில் சேர்த்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. தொடர்பு இருக்கலாம் என்றும்கூறப்படுகிறது.
இந்த இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய ஒரு முஸ்லிம் பேராசிரியர்இருந்துள்ளார். இந்த அமைப்பு போலீசாருக்கு மிகவும் சவாலாக இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications